/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்
/
திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்
திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்
திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்
ADDED : நவ 07, 2025 12:38 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில், 703 வீடுகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை பெறப்பட்டு, 115 வீடுகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. எஞ்சிய வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. முதல்வர் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ், 2025--26ம் ஆண்டில் 190 வீடுகளுக்கு மராமத்து பணி மேற்கொள்வதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டு பணி நடக்கிறது.
ஊரக வளர்ச்சி துறை கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்--2ன் கீழ், 8 ஊராட்சி ஒன்றியங்களில், நீர் நிலைகளை புனரமைத்தல், சாலை பணிகள், பசுமை மற்றும் துாய்மை கிராமங்கள், பொது நுாலகம் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக, 191 பணிகள் எடுக்கப்பட்டு, 174 பணிகள், 11.18 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டர்
தங்கவேல், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

