/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடியில் தார்ச்சாலை பணிகளில் மந்த நிலை
/
சிந்தலவாடியில் தார்ச்சாலை பணிகளில் மந்த நிலை
ADDED : நவ 07, 2025 12:38 AM
கிருஷ்ணராயபுரம், நசிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை பழைய நெடுஞ்சாலை பிரிவு பகுதியில் இருந்து, மாரியம்மன் கோவில் பிரிவு சாலை வரை தார்ச்சாலை பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து, லாலாப்பேட்டை பழைய நெடுஞ்சாலை பிரிவு சாலை முதல், மாரியம்மன் கோவில் செல்லும் சாலை பிரிவு வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மோசமாக இருந்தது. இதனால் புதிய தார்ச்சாலை அமைப்பதற்காக கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டது.
மேலும் புதிய சாலைக்கு சிமென்ட் கான்கிரீட் ஜல்லி கற்கள் கலவை கொண்டு, தற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் சாலை புதுப்பிக்கும் வகையில் புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

