/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண்ணுக்கு கொலை மிரட்டல் சகோதரர் உட்பட மூவர் கைது
/
பெண்ணுக்கு கொலை மிரட்டல் சகோதரர் உட்பட மூவர் கைது
ADDED : டிச 14, 2024 01:00 AM
குளித்தலை, டிச. 14-
லாலாபேட்டையில், மகன் கொலை வழக்கில் சாட்சி அளிக்க சென்ற தாயை, கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, சகோதரர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அடுத்த, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 50. இவரது மகன் விஜய், கடந்த, 2021 டிச., 12ல் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த மணி மகன் சிவா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
தனது மகன் கொலை வழக்கு சம்பந்தமாக கடந்த, 2ல் கரூர் நீதிமன்றத்தின் சாட்சிக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வரும் போது கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கம்மநல்லுார் காலனி அருகே வந்த போது, மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்த மணி மகன்கள் சிவா, சித்திரகுமார் மற்றும் மணிகண்டன், பாரதி ஆகிய நான்கு பேர் சேர்ந்து பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்.
இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து, ஜெயலட்சுமி கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, அண்ணன் தம்பிகளான சிவா, சித்தரகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். பாரதி தலை மறைவாக உள்ளார்.