ADDED : ஜூன் 27, 2026 01:36 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி; தென்னிலை அருகே, கஞ்சா விற்ற இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கைதாகி, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்-டது.
தென்னிலை அருகே, கஞ்சா விற்பனை நடை-பெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்ப-டையில், தென்னிலை போலீசார் ஆலமேடு பெருமாள் கோவில் அருகே சோதனை செய்-தனர். அப்போது, கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்த கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்த மோளப்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த ரோகித், 23, மற்றும் அவனுடன் இருந்த இரண்டு சிறுவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்-தனர். இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
