ADDED : ஜூன் 27, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
கரூர்; கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த, பா.ம.க., நிர்வா-கிகள் செயற்குழு கூட்டம், மேற்கு மாவட்ட செய-லாளர் சுரேஷ் தலைமையில், நேற்று தனியார் ஓட்டலில் நடந்தது.
கூட்டத்தில், கர்நாடகா அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க, பா.ம.க., தலைவர் எம்.பி., அன்புமணி தலைமையில், கரூரில் ஜூலை 3ல், விழிப்புணர்வு பேரணி நடத்-துவது, கரூர் மாவட்டம் சார்பில், 10 ஆயிரம் பேர் பங்கேற்பது உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, அமைப்பு தலைவர் திருமாவளவன், இளைஞர் சங்க செயலாளர் பொன் கங்காதரன், மேற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத், நகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
