/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் மோதிய விபத்தில் தம்பதியர் உள்பட மூவர் காயம்
/
டூவீலர் மோதிய விபத்தில் தம்பதியர் உள்பட மூவர் காயம்
டூவீலர் மோதிய விபத்தில் தம்பதியர் உள்பட மூவர் காயம்
டூவீலர் மோதிய விபத்தில் தம்பதியர் உள்பட மூவர் காயம்
ADDED : செப் 13, 2024 06:47 AM
அரவக்குறிச்சி: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கன்னிவாடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 52. இவரது மனைவி வெண்ணிலா, 42. இருவரும் நேற்று முன்தினம் இரவு, கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அரவக்குறிச்சி அருகே உள்ள மணல்மேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பாலசுப்பிரமணியன் டூவீலரை வேகமாக இயக்கியதால் அப்பகுதியில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது மோதினார்.
இந்த விபத்தில் வாகனத்துடன் இருவரும் விழுந்தனர். இதில் பாலசுப்ரமணியன், அவரது மனைவி, அடையாளம் தெரியாத நபர் என மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மூவரையும் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.