/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியில் சிக்கன சேமிப்பு நாள் விழிப்புணர்வு
/
அரசு பள்ளியில் சிக்கன சேமிப்பு நாள் விழிப்புணர்வு
ADDED : அக் 31, 2025 12:35 AM
அரவக்குறிச்சி, ஒவ்வொரு ஆண்டும் அக்.,30 தேதி, உலக சிக்கன சேமிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை வளர்க்கும் வகையில், கடந்தாண்டு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் அமீது, அனைத்து மாணவர்களுக்கும் உண்டியலை வழங்கினார்.
பள்ளியில் பயிலும் சகோதரர்கள் இரண்டாம் வகுப்பு மாணவர் முகமது ஷாரிக், நான்காம் வகுப்பு மாணவர் முகமது ஷாகிர் இருவரும் இணைந்து சேர்த்து வைத்த உண்டியலை உடைத்தபோது, 1,230 ரூபாய் இருந்தது. மாணவர்களை தலைமை ஆசிரியர் பாராட்டினார். அரசால் அனைத்து மாணவர்களுக்கும் அஞ்சலக, வங்கி கணக்கு துவங்கப்பட்டிருப்பதால், இந்த சேமிப்பை அஞ்சலக வங்கிக் கணக்கில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.
சேமிப்பு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்று, உலக சிக்கன சேமிப்பு நாளில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும்  அனைவரும் சேமிப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

