/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவகர் பஜாரில் பிளாட்பாரம் ஆக்கிரமிப்பு நடந்து செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு

ADDED : அக் 31, 2025 12:36 AM
கரூர், கரூர் ஜவகர் பஜாரில் பிளாட்பாரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்வதில் சிரமப்படுகின்றனர்.
கரூர் நகரத்தில், ஜவஹர் பஜாரில் தாலுகா அலுவலகம், கிளை சிறை, மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், வங்கிகள், நகைக்கடை, ஜவுளி கடை, லாட்ஜ்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் ஜவஹர் பஜாரில் இரவு, 11.00 மணி வரை போக்கு வரத்து இருக்கும். இந்நிலையில், ஜவஹர் பஜாரில் சாலையோரம் பொதுமக்கள் நடந்து சொல்ல பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை, பல வணிக நிறுவனங்கள் ஷெட் மற்றும் பந்தல் அமைத்து பயன்படுத்தி கொள்கின்றனர்.
விளம்பர போர்டு, தோரணங்கள், பந்தல், அலங்கார வளைவுகள் ஆகியவை வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கரூர் மாநகராட்சி அதிகாரிகள், அகற்றாமல் மெத்தனமாக உள்ளனர். பிளாட்பாரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
எனவே, ஜவஹர் பஜார் மட்டுமின்றி மனோகரா கார்னர், கோவை சாலையில் உள்ள பிளாட்பாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.