/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் அரசு பள்ளியில் புலிகள் தின விழா
/
புகழூர் அரசு பள்ளியில் புலிகள் தின விழா
ADDED : ஜூலை 31, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், சர்வதேச புலிகள் தின விழா, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் விஜயன் தலைமையில் நடந்தது.அதில், உலகம் முழுவதும் புலிகள் தினம் கொண்டாப்படுவதன் நோக்கம், புலிகளின் வகைகள், இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை, புலிகளை பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில், ஆசிரியர்கள் விளக்கம் அளித்து பேசினர்.
விழாவில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, உதவி தலைமையாசிரியர்கள் யுவராஜா, பொன்னுசாமி, ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், கோமதி, ஓவிய ஆசிரியர் ஜெய்சங்கர், வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.