/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது: முன்னாள் அமைச்சர் ஆருடம்
/
தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது: முன்னாள் அமைச்சர் ஆருடம்
தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது: முன்னாள் அமைச்சர் ஆருடம்
தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது: முன்னாள் அமைச்சர் ஆருடம்
ADDED : மார் 05, 2024 12:21 PM
கரூர்: '' போதை பொருட்கள் ஏற்றுமதி, விற்பனை, கடத்தல் பிரச்னை மூலம், தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது,'' என, முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் பேசினார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், அவைத்தலைவர் திருவிகா தலைமையில், தி.மு.க., அரசை கண்டித்து, கரூர் தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் பேசியதாவது:
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட நாள் முதல், இன்று வரை போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் அதிகரித்து வருகிறது. போதை பொருட்கள் மையமாக தமிழகம் உள்ளது. முதலில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். தற்போது, இளைஞர்கள் எல்.எஸ்.டி., போதை பொருட்கள் மூலம் சீரழிந்து வருகின்றனர். தி.மு.க.,வை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் தான், போதை பொருட்களை ஏற்றுமதி செய்வது, விற்பனை செய்வது, கடத்தியதாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, எம்.பி., கனிமொழி உள்ளிட்டவர்களை சந்தித்து, ஜாபர் சாதிக் போட்டோ எடுத்துள்ளார். போதை பொருட்கள் ஏற்றுமதி, விற்பனை, கடத்தல் பிரச்னை மூலம், தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. அதற்கு முன்னோடியாக, எம்.பி., தேர்தல் வருகிறது. அதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் சிவசாமி, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், இளைஞர் அணி செயலர் தானேஷ் முத்துக்குமார், பாசறை செயலர் கமலகண்ணன், முன்னாள் மாநகர செயலர் நெடுஞ்செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

