/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி; 30க்குள் விண்ணப்பிக்கலாம்
/
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி; 30க்குள் விண்ணப்பிக்கலாம்
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி; 30க்குள் விண்ணப்பிக்கலாம்
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி; 30க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 12, 2024 06:53 AM
கரூர் : 'திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கு, வரும், 30க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில், திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம், 1,330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு தலா, 15,000 ரூபாய்,- ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்துகொள்ள இயலாது.போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும், 30-க்குள் நேரில் அளிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, 04324-255077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.