தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வகுப்பு


ADDED : நவ 06, 2024 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வகுப்பு

கரூர், நவ. 6-

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும், 8 முதல் தொடங்கப்படுகிறது.

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., - ஜி.ஆர்.,-2, ஜி.ஆர்.-2ஏ (முதன்மைத் தேர்வு) போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 8 முதல் தொடங்குகிறது. ஆங்கிலம், தமிழ் வழியில் பயிற்சி தொடங்கப்படவுள்ளது. ஸ்மார்ட் போர்டு, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வு, இணையவழித்தேர்வு, முழு மாதிரி தேர்வு, மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் தரம் ஆசிரியர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயின்ற மாணவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று, பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும், 7க்குள் கரூர் வெண்ணெய்மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 94990-55912 என்ற தொலைபேசி எண் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94990-55912 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். இத்தகவலை, கலெக்டர் தங்க வேல் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us