/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று தேசிய குடற்புழு நீக்க முகாம்
/
இன்று தேசிய குடற்புழு நீக்க முகாம்
ADDED : ஆக 23, 2024 04:42 AM
கரூர் : தேசிய குடற்புழு நீக்க முகாம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பொது சுகாதாரத்துறை சார்பில், இன்று (23ம் தேதி) தேசிய குடற்புழு நீக்க முகாம் நடக்கிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும், 30ல் மருந்து வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில், 1 வயது முதல், 19 வயதிற்குட்பட்ட, மூன்று லட்சத்து, 63 ஆயிரத்து, 759 பேர், 20 முதல், 30 வயதுடைய, 93 ஆயிரத்து, 663 பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பள்ளி செல்லாத குழந்தைகளை, அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்து குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

