/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு பணிக்காக கழிப்பறை மூடல்
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு பணிக்காக கழிப்பறை மூடல்
கரூர் பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு பணிக்காக கழிப்பறை மூடல்
கரூர் பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு பணிக்காக கழிப்பறை மூடல்
ADDED : ஜூலை 05, 2024 12:56 AM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள, இலவச கழிப்பறை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டு இருப்பதால் பயணிகள் தவித்து வருகின்-றனர்.கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து கோவை, நாகை, மதுரை, கன்னியா-குமரி, சேலம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அது மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் கரூர் வழியாக இரவில், அதிக பஸ்கள் செல்கின்றன. நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும், நெருக்கடி மிகுந்த கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநக-ராட்சி சார்பில் இலவச கழிப்பறை உள்ளன.சரியான பராமரிப்பின்றி, இரவில் மின் விளக்குகள் இன்றி பெயர-ளவுக்கு உள்ளன. மேலும், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்-பதால், கழிப்பறையை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்-வதில்லை. கழிப்பறையை பயன்படுத்தும் பயணிகளுக்கு குமட்டல் ஏற்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பல்வேறு புகார்களை தொடர்ந்து ஆண்கள் கழிப்பறை பராம-ரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தில் எதிரில் உள்ள கழிப்பறை திறக்கப்பட்டுள்ளது. அது மிகவும் சிறிய கழிப்பறை என்பதால், கூட்ட நெரிசலில் பயன்ப-டுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது. பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆண்கள் கழிப்பறையின், பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க மாநக-ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.