/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
/
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
ADDED : டிச 11, 2024 01:32 AM
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
கரூர், டிச. 11-
தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், மெல்ல மெல்ல விலை குறைய தொடங்கியுள்ளது.
தமிழகத்தில்,
கடந்த நவம்பரில் பனிப்பொழிவு மற்றும் மழை இருந்தது. குறிப்பாக,
அதிகாலையில் நிலவும், கடும் பனிப்பொழிவால், தக்காளி செடியில் உள்ள
பூக்கள் உதிர்வது வழக்கம். இதனால், 30 முதல், 40 சதவீதம் வரை தக்காளி
வரத்து குறைந்தது. இதனால் கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி
மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்தும் சரிந்தது. கடந்த மாதம்
ஒரு கிலோ தக்காளி, 45 முதல், 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, மழை
குறைவால் தக்காளி வரத்து அதிகரித்து, விலை குறைய தொடங்கியுள்ளது.
இதுகுறித்து,
தக்காளி மொத்த வியாபாரிகள் கூறியதாவது: கடந்த நவம்பரில் தக்காளி
வரத்து குறைவால், சில்லரை விற்பனைகளில் கொஞ்சம் கூடுதலாக விலை
இருந்தது. இந்த விலை, தை மாதம் முடியும் வரை நீடிக்கும் என
எதிர்பார்த்தோம். இந்நிலையில் மழை குறைந்தது. இதனால், தக்காளி
செடிகளில், பூக்கள் உதிர்வது குறைந்ததால், வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு கிலோ தக்காளி, 30 முதல், 35 ரூபாய் வரை
விற்கப்படுகிறது. மேலும், பனி காலம் முடிந்தவுடன், புதிய செடிகளை
விவசாயிகள் நடவு செய்வர். அதன் பிறகு, கூடுதல் தக்காளி விற்பனைக்கு
வரும் போது, மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.