/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
/
தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 27, 2025 02:02 AM
கரூர், தக்காளி விலை உயர்வு காரணமாக, அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், குறைந்த அளவிலேயே காய்கறி சாகுபடி நடக்கிறது. கிருஷ்ணராயபுரம், உப்பிடமங்கலம், வெள்ளியணை உள்பட சில பகுதிகளில் மட்டுமே தக்காளி சாகுபடி, 200 ஏக்கரில் மட்டுமே நடக்கிறது. ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டாலும், கார்த்திகை மற்றும் வைகாசி பட்டம், நடவுக்கு ஏற்ற காலம். வைகாசி பட்டம் துவங்கியுள்ளதால், தக்காளி நடவு செய்கின்றனர். கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. அதன்படி, அறுவடை சீசன் தொடங்கி உள்ளது.
தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக, தக்காளி விளைச்சல் பாதி
க்கப்பட்டுள்ளது. இதனால் கிலோ, 68 ரூபாயாகவும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தக்காளி அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன், மார்க்கெட்டுகளுக்கு வழக்கத்தை விட வரத்து அதிகமானதால், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் வீழ்ச்சி அடைந்தது. தக்காளியை பறிப்பதற்கான கூலியை கூட கொடுக்க முடியாமல் அப்படியே விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவடை செய்த தக்காளிகளுக்கு நல்ல விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நல்ல விலை கிடைத்த போதும், மழை காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது என, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

