/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் வியாபாரிகள் புலம்பல்
/
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் வியாபாரிகள் புலம்பல்
ADDED : ஜூன் 09, 2025 04:26 AM
குளித்தலை: குளித்தலை தற்காலிக பஸ் ஸ்டாண்ட், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.
இதில், ஏற்கனவே நக-ராட்சி சார்பில், 19 கடைக்காரர்கள் தொடர்ந்து கடை நடத்தி வரு-கின்றனர். இந்தாண்டு புதிதாக, 13 கடைகள் ஏலம் விடப்-பட்டன. இதை தொடர்ந்து குளித்தலை நகராட்சி பஸ் ஸ்டாண்டில், 32 கடைகள் ஏலம் விடப்பட்டு, வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்த பஸ் ஸ்டாண்டில் உள்ளே தரைக்கடை வியா-பாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், கனரக வாகன வியாபா-ரிகள் உள்ளிட்டோர் உள்ளே சென்று தங்களின் வியாபாரத்தை செய்து வருவதால் ஏலம் எடுத்த கடைக்காரர்கள் பாதிக்கப்படுவ-தாக வேதனை தெரிவிக்கின்றனர். ஏலம் எடுக்காமல், வெளியில் இருந்து வந்து வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்து-விட்டு செல்வதால், தங்களால் நகராட்சிக்கு வாடகை கூட செலுத்த முடியாத நிலை உள்ளதாக ஏலம் எடுத்து கடை நடத்தி வரும் வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.
இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.