/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் விழுந்த கரும்பு கட்டுகளால் போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் விழுந்த கரும்பு கட்டுகளால் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் விழுந்த கரும்பு கட்டுகளால் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் விழுந்த கரும்பு கட்டுகளால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 02, 2024 03:03 AM
கரூர்: கரூர் அருகே, லாரியில் இருந்து கரும்பு கட்டுகள் சாலையில் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, புகழூரில் தனியார் சர்க்கரை ஆலை செயல்படுகிறது. ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து, நொய்யல் வழியாக, கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர், மறவாப்பாளையம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென டிராக்டரில் இருந்த, 10க்கும் மேற்பட்ட கரும்பு கட்டுகள், சாலையின் நடுவே சரிந்து விழுந்தது. இதையடுத்து, டிரைவர் டிராக்டரை சாலை ஓரமாக நிறுத்தினார். அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த, வேலாயுதம்பாளையம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் கரும்பு கட்டுகளை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால், மறவாப்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.