ADDED : நவ 05, 2026 06:57 AM
கரூர்:கரூரில்
தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலை குறைக்கவும்,
போக்குவரத்தை சீரமைக்கவும், போக்குவரத்து காவல் துறை சார்பில்,
இன்று முதல் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் மற்றும்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கரூர் நகர போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் சார்பில், வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளி
பண்டிகை வியாபாரம் மற்றும் ஷாப்பிங் காரணமாக, கரூரின் முக்கிய
வர்த்தக பகுதியான ஜவஹர் பஜாரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால், நெரிசலை தவிர்க்கவும், தீயணைப்பு மற்றும் அவசர கால வாகனங்கள்
எளிதாக செல்லவும், ஜவஹர் பஜார் வீதிகளுக்குள் பகல் நேரங்களில் கனரக
மற்றும் சரக்கு வாகனங்கள் இன்று முதல் வரும், 8ம் தேதி வரை நுழைய தடை
விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாற்று பாதையில் செல்ல வேண்டும்.
சரக்கு
வாகனங்கள் இரவு, 10:00 மணி முதல் காலை, 8:00 மணி வரை மட்டுமே, ஜவஹர்
பஜாருக்கு வந்து செல்ல வேண்டும். ஜவஹர் பஜாருக்கு வரும் வாகனங்களை,
திருவள்ளுவர் மைதானத்தில் பொதுமக்கள் நிறுத்த வேண்டும்.
பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாட பொதுமக்கள்
ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
