/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தள்ளுவண்டி கடைகளால் போக்குவரத்து நெரிசல்
/
தள்ளுவண்டி கடைகளால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 16, 2025 07:41 AM
கரூர்: கரூர், காந்திகிராமம், திருச்சி சாலையில் ரயில்வே பாலம் அருகே தினமும் நுாற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் அருகில் சாலையோரம் தள்ளு வண்டி கடைகள் போடுகின்றனர். மாலை நேரங்களில், 5க்கும் மேற்பட்ட கடைகள் சாலையோரத்தை ஆக்கிரமித்து கொள்கின்றன. இங்கு வருவோர் இருசக்கர வாகனங்களையும் சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
இதன் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள பயணிகள் ஏற்றி செல்ல பஸ்கள் நின்று செல்கிறது. அப்போது மற்ற வாகனங்கள் கடந்து செல்ல சிரமமாக உள்ளது. சில நேரங்களில் விபத்து ஏற்பட காரணமாக அமைகிறது. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.