/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காரில் இருந்து வெளியான வெள்ளை நிற புகையால் போக்குவரத்து நெரிசல்
/
காரில் இருந்து வெளியான வெள்ளை நிற புகையால் போக்குவரத்து நெரிசல்
காரில் இருந்து வெளியான வெள்ளை நிற புகையால் போக்குவரத்து நெரிசல்
காரில் இருந்து வெளியான வெள்ளை நிற புகையால் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 14, 2024 07:11 AM
கரூர்: கரூரில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து, திடீரென வெள்ளை நிறத்தில் புகை வெளியானதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், காதப்பாறை கணேசா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 42; இவர் நேற்று மாலை, 6:00 மணிக்கு கோவை சாலை, ராமானுஜம் நகர் பிரிவில் ஹூன்டாய் கிரிட்டா காரில் சென்று கொண்டிருந்ததார்.
அப்போது, காரின் பின்பகு-தியில் உள்ள சைலன்சரில் இருந்து, வெள்ளை நிறத்தில் புகை வெளியானது. உடனடியாக காரை, பாலகிருஷ்ணன் நிறுத்தினார்.இதனால், கோவை சாலை முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. மற்ற வாகனங்கள் செல்ல முடியாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கரூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகிரா பானு மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். 10 நிமி-டங்களுக்கு பின் புகை நின்றது.காரில் ஏ.சி., ஒயரில் ஏற்பட்ட கசிவே, வெள்ளை நிற புகை வெளியாக காரணம் என தெரியவந்தது. இதனால், கரூர்-கோவை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.