/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலை இருபுறம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களால் அவதி
/
நெடுஞ்சாலை இருபுறம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களால் அவதி
நெடுஞ்சாலை இருபுறம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களால் அவதி
நெடுஞ்சாலை இருபுறம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களால் அவதி
ADDED : டிச 09, 2024 07:03 AM
கரூர்: போக்குவரத்துக்கு இடையூறாக நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வரிசைகட்டி நிற்கும் லாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூரில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 18 கி.மீ., தொலைவில் க.பரமத்தி கடைவீதி உள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கடைவீதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறி, கரூர் சென்று தங்களது பணிகளை முடித்து மீண்டும் ஊர் திரும்புகின்றனர். சிலர், தினமும் டூவீலர்களில் கரூருக்கு சென்று பணிகள் முடிந்து ஊர் திரும்புகின்றனர்.
இந்நிலையில், காலை, மாலை நேரங்களில் காருடையாம்பாளையம் முதல் பரமத்தி கடைவீதி வரை உள்ள தனியார் ஓட்டல்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் முன் இருபுறமும் ஜல்லி லாரிகளை வாகன ஓட்டுனர்கள் நிறுத்தி விடுகின்றனர். நிறுத்தப்பட்ட லாரிகளை மணிக்கணக்கில் யாரும் கண்டுகொள்வதில்லை. சாலையின் இருபுறமும் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட காரணமாக உள்ளது.
எனவே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன டிரைவர்கள் மீது போக்குவரத்து ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே விதி மீறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் மணல், ஜல்லி லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.