/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாரச்சந்தை கூடும் நாளில் போக்குவரத்து நெரிசலால் அவதி
/
வாரச்சந்தை கூடும் நாளில் போக்குவரத்து நெரிசலால் அவதி
வாரச்சந்தை கூடும் நாளில் போக்குவரத்து நெரிசலால் அவதி
வாரச்சந்தை கூடும் நாளில் போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : நவ 29, 2024 01:17 AM
வாரச்சந்தை கூடும் நாளில்
போக்குவரத்து நெரிசலால் அவதி
க.பரமத்தி, நவ. 29-
க.பரமத்தியில், வாரச்சந்தை கூடும் நாளில், சாலையோரத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர்-கோவை சாலையில், க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரில் செவ்வாய்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிறு, குறு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். பலர் வாரச்சந்தை நுழைவாயிலில், தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சிறு, சிறு கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
அந்த சமயத்தில், நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்கள், லாரிகள், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக, சரக்கு வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். வாரச்சந்தையால் வாகன போக்குவரத்திற்கு, இடையூறாக இருக்கும் சாலையோர கடைகள், சரக்கு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.