/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
யு.பி.எஸ்.இ., தேர்வுக்கு பயிற்சி மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
/
யு.பி.எஸ்.இ., தேர்வுக்கு பயிற்சி மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
யு.பி.எஸ்.இ., தேர்வுக்கு பயிற்சி மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
யு.பி.எஸ்.இ., தேர்வுக்கு பயிற்சி மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 20, 2025 02:03 AM
கரூர், நவ. 20
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமை பணி போட்டி தேர்வில் பங்கேற்க, ஆயத்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்க
வேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் ஆகியவை இணைந்து, ஆண்டு
தோறும் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், 20 பேருக்கு இந்திய குடிமை பணிகளுக்கான போட்டி தேர்வில் பங்கேற்க, ஆயத்த பயிற்சியை வழங்கி வருகின்றன.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை வரும் 25 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் தரைதளம், கோழிப்பண்ணை ரோடு, கொட்டப்பட்டு, திருச்சி- மற்றும் தொலைபேசி எண்: 0431-2421173 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

