/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு பயிற்சி
/
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 07, 2025 01:26 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
அரவக்குறிச்சி அருகே உள்ள, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு, ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம், நாட்டு நலப்பணித்திட்ட மாநில துணை தொடர்பு அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
போதை பொருள் விழிப்புணர்வு, நன்னடத்தை, பெண்ணுரிமை பாதுகாப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜுதீன், நாகூர் மீரான், நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் முஹம்மது ஹாரிஸ் அலி மற்றும் போதை ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் முஹம்மது தாஹீர் உசேன் கலந்து கொண்டனர்.