/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பயிற்சி
/
தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 18, 2024 03:39 AM
கரூர்: கரூர், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தேசிய பசு-மைப்படை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
இதில், மாவட்ட வன அலுவலர் சண்முகம் தலைமை வகித்து, மரம் நடுவதின் அவசியம், காலநிலை மாற்-றத்தை எதிர்கொள்வதில் மாணவர்களின் பங்கு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறி-யாளர் ஜெயக்குமார், 'சுற்றுச்சூழலை பாதுகாப்பது மாணவர்கள் கையில் உள்ளது' என்றார். அரங்கநாதன் பேட்டை அரசு மேல்நி-லைப்பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, பேப்பர் பேக் செய்முறை பயிற்சியளித்தனர். வாழை, மூங்கி-லினால் செய்யப்பட்ட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.