/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கை கைது
/
வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கை கைது
ADDED : ஜூலை 02, 2025 02:29 AM
கரூர், கரூர் அருகே, வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த திருநங்கையை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காடையூரான் வலசு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ், 42; இவர் கடந்த, 30ம் தேதி இரவு, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில், காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த திருநங்கைகள் இனியா, 21, தீப்சி, 23, ஆகியோர் தர்மராஜ் சென்ற காரை வழி மறித்துள்ளனர். பிறகு, கத்தியை காட்டி மிரட்டி, தர்மராஜ் வைத்திருந்த, 18 ஆயிரம் ரூபாயை, இருவரும் பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து, தர்மராஜ் கொடுத்த புகார்படி, இனியாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, தீப்சியை கரூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.