/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராவல் மண் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்
/
கிராவல் மண் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஆக 07, 2024 07:37 AM
குளித்தலை: கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.குளித்தலை அடுத்த, மாயனுார் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து, மணல் கடத்தப்பட்டு வருவதாக ஆர்.டி.ஓ., தனலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஆர்.டி.ஓ., தலைமையில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், நான்கு யூனிட் கிராவல் மண் இருந்தது தெரிய வந்தது. டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, லாரியின் டிரைவர் சோமூரை சேர்ந்த சுரேஷ்குமார், 41, என்பவர் மீது வி.ஏ.ஓ., வினோத்குமார் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.