ADDED : அக் 04, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:வயலுார் பஞ்சாயத்து பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வயலுார் குளம், நடுப்பட்டி
சாலை, பாம்பன்பட்டி சாலை, சரவணபுரம் சாலை ஆகிய பகுதிகளில்,
400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 100 நாள் திட்ட
தொழிலாளர்களை கொண்டு பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு அமைத்தல், தண்ணீர் ஊற்றுதல் ஆகிய பணிகள்
மேற்கொள்ளப்பட்டன.
