/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்
/
அரவக்குறிச்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்
ADDED : டிச 04, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: பருவமழை தொடங்கிய நிலையில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளின் ஓரங்களில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில். மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது.
சின்னதாராபுரத்தில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில் புதுப்பாளையம் அருகில் சாலையோரங்களில் புங்கை, வேம்பு, புளிய மரக்கன்றுகள் நடப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி ஆய்வு செய்தார்.