ADDED : மே 23, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:புதுப்பட்டி சாலையின் இருபுறமும், நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, புதுப்பட்டி கிராமத்தில் உள்ள தார் சாலை இரு புறமும், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
வேம்பு, புளியன், ஈட்டி, புங்கன் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணி செய்யப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால், மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
