/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் டி.ஆர்.இ.யு., ஆர்ப்பாட்டம்
/
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் டி.ஆர்.இ.யு., ஆர்ப்பாட்டம்
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் டி.ஆர்.இ.யு., ஆர்ப்பாட்டம்
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் டி.ஆர்.இ.யு., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 03, 2025 02:24 AM
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், டி.ஆர்.இ.யு., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் கிளை டி.ஆர்.இ.யு., சார்பில் செயலாளர் நல்லமுத்து தலைமையில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், உயர்ந்த வருவாய்க்கு ஏற்ப, போனஸ் நாட்களை உயர்த்த வேண்டும், 7,000 ரூபாய் என்ற உச்ச வரம்பை ரத்து செய்து, உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்ட த்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் கோட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ராஜா முகமது, செயலாளர் சுப்பிரமணியன் உள்பட நிர்வாகி
கள் பங்கேற்றனர்.