/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ம.க., சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி
/
பா.ம.க., சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி
ADDED : செப் 18, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் ;கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., சார்பில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த, 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பசுபதி தலைமையில், புகழூரில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், 21 தியாகிகளின் உருவப்படத்துக்கு, மேற்கு மாவட்ட பா.ம.க., செயலர் சுரேஷ் மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பு தலைவர் கொங்கு குணா, செயலர் குணசீலன், துணை செயலர் சதீஷ், கரூர் நகர செயலர் ராக்கி முருகேசன், ஒன்றிய செயலர் சுபாஷ் சந்திரன் உள்பட, நிர்வாகிகள் பலர்
பங்கேற்றனர்.