/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோட்ச தீபம் ஏற்றி விஜயகாந்திற்கு அஞ்சலி
/
மோட்ச தீபம் ஏற்றி விஜயகாந்திற்கு அஞ்சலி
ADDED : ஜன 29, 2024 12:40 PM
குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., பரளி கிராமத்தில், தே.மு.தி.க., மற்றும் அப்துல் கலாம் இளைஞர் மன்றம் சார்பில், மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர்கள் தாமோதரன், சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் வடிவேல், மருதுார் நகர செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மறைந்த விஜயகாந்தின் உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பரளி தே.மு.தி.க., மற்றும் அப்துல் கலாம் இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.