/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே உயர்மின் கோபுரத்தில் விளக்குகள் எரியாததால் அவதி
/
கரூர் அருகே உயர்மின் கோபுரத்தில் விளக்குகள் எரியாததால் அவதி
கரூர் அருகே உயர்மின் கோபுரத்தில் விளக்குகள் எரியாததால் அவதி
கரூர் அருகே உயர்மின் கோபுரத்தில் விளக்குகள் எரியாததால் அவதி
ADDED : ஜூலை 14, 2025 04:22 AM
கரூர்: கரூர் அருகே, சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் உயர் மட்ட மின் கம்பத்தில், விளக்குள் சரிவர எரிவதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
கரூர் அருகே, சுக்காலியூர் ரவுண்டானாவில் கோவை சாலை, திருச்சி சாலை, மற்றும் கரூர் நகர சாலைகள் பிரியும் இடத்தில், உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் உள்ள பெரும்பாலான விளக்குகள் எரிவதில்லை. மேலும், ரவுண்டானாவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களிலும், முழுமையாக விளக்குகள் எரிவது இல்லை. இதனால், சுக்கா-லியூர் ரவுண்டானா பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்-ளது.உயர்மின் கோபுரத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாததால், விபத்து நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே, மின் விளக்கு-களை இரவு நேரத்தில் எரியும் வகையில், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.