/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கம்மநல்லுாரில் தெரு விளக்கு பழுதால் அவதி
/
கம்மநல்லுாரில் தெரு விளக்கு பழுதால் அவதி
ADDED : அக் 30, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், பொய்கைப்புத்துார் பகுதியில், தெரு விளக்கு எரியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கம்மநல்லுார் பஞ்சாயத்து, பொய்கைப்புத்துார் கிராமத்தில், பஞ்சாயத்து மூலம் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மழை, காற்று ஆகிய காரணங்களால் தெரு விளக்குகளில் பழுது ஏற்பட்டுள்ளது.
இதனால் இரவு நேரங்களில் சாலை வழியாக, அச்சத்துடன் செல்ல வேண்டியுளளது. மேலும் கரூர்-திருச்சி நெடுஞ்சாலை கம்மநல்லுார் மற்றும் பொய்கைப்புத்துார் பஸ் ஸ்டாப் பகுதிகளில் எந்த விளக்குகளும் எரியவில்லை. எனவே, பழுது ஏற்பட்டுள்ள தெரு விளக்குகளை எரிய வைக்க பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

