/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நங்காஞ்சி ஆற்று பாலத்தில் விளக்குகள் இல்லாததால் அவதி
/
நங்காஞ்சி ஆற்று பாலத்தில் விளக்குகள் இல்லாததால் அவதி
நங்காஞ்சி ஆற்று பாலத்தில் விளக்குகள் இல்லாததால் அவதி
நங்காஞ்சி ஆற்று பாலத்தில் விளக்குகள் இல்லாததால் அவதி
ADDED : ஜூன் 04, 2025 01:22 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, நங்காஞ்சி ஆற்று பாலத்தில் விளக்கு
கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
அரவக்குறிச்சியில் இருந்து, பள்ளப்பட்டி செல்லும் நுழைவு வாயி லில் நங்காஞ்சி ஆற்று பாலம் உள்ளது. இவ்வழியாக திண்டுக்கல், பழனி ஆகிய இடங்களுக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். மேலும் பள்ளப்பட்டி சுற்று வட்டார பகுதியைகளை சேர்ந்தவர்களும், நங்காஞ்சி ஆற்று பாலத்தை கடந்துதான், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். இந்
நிலையில், கடந்த ஒரு வாரமாக ஆற்று பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் பாலத்தில் இருள் சூழ்ந்துள்ளது.
இதனால் வாகன ஓட்டி
கள் மற்றும் நடந்து செல்லும் பெண்கள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மின்விளக்குகள் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன், விளக்குகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.