/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயர் கோபுர மின் கம்பத்தில் எரியாத விளக்குகளால் அவதி
/
உயர் கோபுர மின் கம்பத்தில் எரியாத விளக்குகளால் அவதி
உயர் கோபுர மின் கம்பத்தில் எரியாத விளக்குகளால் அவதி
உயர் கோபுர மின் கம்பத்தில் எரியாத விளக்குகளால் அவதி
ADDED : நவ 03, 2025 03:25 AM
கரூர்: உயர் கோபுர மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்-குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு-கின்றனர்.
கரூர் அருகே, சுக்காலியூர் ரவுண்டானாவில், கோவை சாலை, திருச்சி சாலை, கரூர் நகர சாலைகள் பிரியும் இடத்தில், உயர் கோபுர மின் கம்பம் அமைக்கப்பட்டு, மின் விளக்குகள் பொருத்-தப்பட்டுள்ளன. ஆனால், அதில் உள்ள பெரும்பாலான விளக்-குகள் சரிவர எரிவது இல்லை. மேலும், ரவுண்டானாவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள, மின் கம்பங்களிலும் முழுமையாக விளக்-குகள் எரிவது இல்லை. இதனால், சுக்காலியூர் ரவுண்டானா பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால், மின்விளக்குகளை எரிய வைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.