/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதருக்குள் மைல் கற்கள் அகற்ற மக்கள் கோரிக்கை
/
புதருக்குள் மைல் கற்கள் அகற்ற மக்கள் கோரிக்கை
ADDED : நவ 03, 2025 03:24 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., தவிர, 157 கிராம பஞ்.,கள் உள்ளன. மாநகர பகுதிகளில் இருந்து கிராம பகுதிகளுக்கு செல்ல சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், கிராமங்களுக்கு செல்லும் சாலையோரம், எத்தனை கி.மீ., துாரத்தில் கிராமம் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மைல் கற்கள் நடப்பட்-டுள்ளன. புதிதாக அப்பகுதிக்கு வருவோர், இந்த மைல் கற்களை பார்த்து, செல்லும் துாரம் குறித்து தெரிந்துகொள்கின்றனர்.இதில், சில மைல் கற்களை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்-மண்டி காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்-குள்ளாகின்றனர். எனவே, மைல் கற்களை மறைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

