/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் வாகனம் நிறுத்தம் ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு
/
சாலையோரம் வாகனம் நிறுத்தம் ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு
சாலையோரம் வாகனம் நிறுத்தம் ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு
சாலையோரம் வாகனம் நிறுத்தம் ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு
ADDED : நவ 03, 2025 03:24 AM
கரூர்: கரூரில் இருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில், 18 கி.மீ., தொலைவில் க.பரமத்தி கடைவீதி உள்ளது. சுற்று வட்டார பகுதி-களில் வசிப்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கடைவீதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பஸ் ஸ்டாப்பில், பஸ் ஏறி கரூர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், காலை, மாலை நேரங்களில் காருடையாம்பா-ளையம் முதல் பரமத்தி கடைவீதி வரை உள்ள தனியார் ஓட்டல், கடைகள் முன் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஜல்லி லாரிகளை நிறுத்தி வைக்கின்றனர். மணிக்கணக்கில் யாரும் கண்-டுகொள்வதில்லை. சாலையின் இருபுறமும் லாரிகள் நீண்ட வரி-சையில் நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசர தேவைக்கு ஆம்-புலன்ஸ் வானகம் எளிதில் வந்து செல்ல முடியாத நிலை உள்-ளது. இதை போக்குவரத்திற்கு போலீசார் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

