/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லறை திருநாளையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
/
கல்லறை திருநாளையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
ADDED : நவ 03, 2025 03:23 AM
கரூர்: கல்லறை திருநாளையொட்டி, கிறிஸ்தவர்கள், உறவினர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
உலகம் முழுவதும், ஆண்டுதோறும் நவ., 2ல் கல்லறை திருநா-ளாக, கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம் இறந்தவர்கள், புதைக்கப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்ட கல்ல-றைகளில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதனால், நேற்று கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள், அவர்களது உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, மலர்களால் அலங்கரித்திருந்தனர். பின், மாலை கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
செலுத்தினர்.
கல்லறை திருநாளையொட்டி, கரூர் சர்ச் கார்னர் கல்லறை தோட்டம், பாலம்மாள்புரம் கல்லறை தோட்டம் உள்ளிட்ட பகு-திகளில் உள்ள, கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் திரளாக சென்று, இறந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்-தினர்.

