/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க., கூட்டம்: போலீசாரிடம் சி.பி.ஐ., 2வது நாளாக விசாரணை
/
த.வெ.க., கூட்டம்: போலீசாரிடம் சி.பி.ஐ., 2வது நாளாக விசாரணை
த.வெ.க., கூட்டம்: போலீசாரிடம் சி.பி.ஐ., 2வது நாளாக விசாரணை
த.வெ.க., கூட்டம்: போலீசாரிடம் சி.பி.ஐ., 2வது நாளாக விசாரணை
ADDED : நவ 06, 2025 02:06 AM
கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் விஜய் பங்கேற்ற, த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அதில், குழந்தைகள், பெண்கள் உள்பட, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவுபடி சி.பி. ஐ.,- எஸ்.பி., பிரவீன் குமார் தலைமையில், 25 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், கடை வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்பட, 306 பேருக்கு, சி.பி.ஐ., தரப்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளது. இதையடுத்து கடந்த, 2 முதல் கரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில் விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் முதல் கரூர் வேலுச்சாமி புரத்தில் த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த, போலீசாரிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று இரண்டாவது நாளாக பாதுகாப்பு பணியில் இருந்த, ஐந்து போலீஸ் எஸ்.ஐ., க்கள், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகினர்.
அவர்களிடம், த.வெ.க., பிரசார கூட்டத்தில், பாதுகாப்பு பணி குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, த.வெ.க., கூட்டத்தில் நெரிசலின் போது, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கேள்வி கேட்டு, பதிலை பதிவு செய்துள்ளனர்.

