/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவக்குளம் கிராமத்தில் நெற்பயிர் நடவு பணி தீவிரம்
/
கோவக்குளம் கிராமத்தில் நெற்பயிர் நடவு பணி தீவிரம்
ADDED : நவ 06, 2025 01:06 AM
கிருஷ்ணராயபுரம், கோவக்குளம் கிராமத்தில், விவசாய தொழிலாளர்கள் மூலம் நெல் நாற்றுகள் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கோவக்குளம், பிச்சம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிளை பாசன காட்டுவாரி வாய்க்கால் மூலம் பாய்ச்சப்படுகிறது.
தற்போது, வாய்க்காலில் தண்ணீர் வருவதால் இந்த பாசன நீரை கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளனர்.தற்போது, வயலில் டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவுப்பணிகள் செய்யப்பட்டு, நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நாற்றங்காலில் உள்ள பயிர்களை பறித்து, நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில், 70 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணி துவங்கி நடந்து வருகிறது.

