ADDED : நவ 06, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை,
பெரியபாலம் காவிரிஆற்றில் மணல் கடத்துவதாக வந்த தகவலின்படி,
குளித்தலை எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை,
சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது, மகேந்திரா பிக்கப் சரக்கு
வாகனத்தில், அனுமதியின்றி, ஆற்று மணலை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது, இருவரை பிடித்து விசாரித்து கொண்டிருந்தபோது, அவர்கள்
தப்பினர்.
விசாரணையில் குளித்தலை நாபாளையம் பிரபாகரன், 27,
மணிகண்டன், 28, என்பது தெரியவந்தது. இருவர் மீதும் போலீசார் வழக்கு
பதிந்து, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
