/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாரிகள் மோதல்; இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மீட்பு
/
லாரிகள் மோதல்; இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மீட்பு
ADDED : நவ 22, 2024 01:42 AM
லாரிகள் மோதல்; இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மீட்பு
கரூர், நவ. 22-
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை டிரெய்லர் லாரி மீது, டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் இடிபாட்டில் சிக்கிய டிரைவரை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் பஞ்சப்பட்டியை சேர்ந்த கந்தவேல், 42, டாரஸ் லாரி டிரைவர். இவர் நேற்று மாலை, 6:00 மணிக்கு எம்.சாண்ட் லோடு ஏற்றிக்கொண்டு, கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தார். ஏமூர் அருகில் இரும்பு கம்பிகளை ஏற்றிச்சென்ற டிரெய்லர் லாரி, அங்குள்ள பிரிவு சாலையில் இருந்து, கரூர்-திருச்சி நெடுஞ்சாலைக்கு திரும்பி உள்ளது.
அப்போது, பின்னால் வந்த டாரஸ் லாரி மோதியது. அதில், டிரைவர் கந்தவேல் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பின், கந்தவேலை மீட்டனர். அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டதால், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தான்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.