/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வயல்களில் துணிகளை கட்டி மயில்களை தடுக்க முயற்சி
/
வயல்களில் துணிகளை கட்டி மயில்களை தடுக்க முயற்சி
ADDED : பிப் 16, 2024 11:48 AM
கரூர்: மயில்களிடம் இருந்து பயிர்களை காக்க, வயல்களில் துணிகளை விவசாயிகள் கட்டி நுாதன முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
கரூர் மாவட்டத்தில், காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப் பகுதியின் பாசன நிலங்களில் நெல், வாழை, மஞ்சள் மற்றும் கரும்பு, சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை, கரூர் மாவட்டத்தில் அதிகம் உள்ளதால், பயிர்கள் சேதம் அடைவதாக விவசாயிகள் புகார் கூறினர். இதனால், மயில்களை விரட்ட வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைபடி, சில நுாதன முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பயிர்களை மயில்கள் சேதப்படுத்தி வருகிறது. மயில்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் மயில்களை கட்டுப்படுத்த பழைய வீடியோ டேப், பிளாஸ்டிக் டேப் மற்றும் சி.டி.,க்களை வயல்களில் கட்டி தொங்க விடுமாறு அறிவுரை வழங்கினர். வீடியோ டேப், 'சி.டி'யும் காற்றில் ஆடும் தன்மை கொண்டதால், ஆட்கள் இருப்பதாக கருதி மயில்கள் பயிர் பக்கம் செல்லாது. ஆனால், தற்போது அவை கிடைப்பதில்லை. எனவே, மயில்கள் செல்லாத வகையில், வயல்களை சுற்றி துணிகளை கட்டி உள்ளோம். மயில்கள், விவசாய நிலத்தின் நடு பகுதிக்கு செல்லாது. வரப்பு பகுதியில், துணி கட்டியிருப்பதால், ஓரளவுக்கு பயிர்களை பாதுகாக்க முடிகிறது.
இவ்வாறு கூறினர்.