/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் சுற்று வட்டாரத்தில் மஞ்சள் சாகுபடி அமோகம்
/
கரூர் சுற்று வட்டாரத்தில் மஞ்சள் சாகுபடி அமோகம்
ADDED : செப் 27, 2025 01:41 AM
கரூர், கரூர் சுற்று வட்டார பகுதிகளில், மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மற்றும் க.பரமத்தி பகுதிகளில், விவசாயிகள் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். கிணற்று மற்றும் ஆற்று பாசனத்தை நம்பி, 200 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக அறுவடை செய்யப்படும். சிறிய அளவிலான மஞ்சள், தோகையுடன் பறிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யப்படும்.
மற்ற பெரும்பாலான மஞ்சள், வெட்டியெடுத்து பதப்படுத்தப்பட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும்.நடப்பாண்டில் பருவ மழை கை கொடுக்கும் ஆர்வமுடன் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். தற்போது, மஞ்சள் துளிர் விட்டு நன்கு வளர்ந்துள்ளது. இதனால் அறுவடை காலத்தில் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.