ADDED : ஏப் 06, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்-சேலம் பழைய சாலை வாங்கப்பாளையம் பகுதியில், வீடுகள் மற்றும் பள்ளிகள் உள்ளது.
இதனால்,
அந்த பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், சிக்னல்
விளக்குகள் சரியான முறையில் எரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில்,
கடந்த சில நாட்களாக சிக்னல் விளக்குகள் பழுதாகி எரிவது இல்லை.
இதை,
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்யவில்லை. இதனால்,
வாங்கப்பாளையம் பிரிவு பகுதியில் செல்லும் கார்கள், வேன்கள் மற்றும்
லாரிகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பழுதான
சிக்னல் விளக்குகள் எரியும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

