/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் திருடிய வழக்கில் இருவர் கைது
/
வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் திருடிய வழக்கில் இருவர் கைது
வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் திருடிய வழக்கில் இருவர் கைது
வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் திருடிய வழக்கில் இருவர் கைது
ADDED : டிச 10, 2024 01:54 AM
வீட்டுக்குள் புகுந்து
5 பவுன் திருடிய வழக்கில் இருவர் கைது
ஆத்துார், டிச. 10-
ஆத்துாரில், வீட்டுக்குள் புகுந்து நகை திருடிச் சென்ற வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்துார், கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 31. பொக்லைன் வாகன ஆப்ரேட்டரான இவர், கடந்த பிப்., 2ல், வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். மீண்டும் வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த செந்தில்நாதன், 34, தென்காசி மாவட்டம், குற்றாலத்தை சேர்ந்த மாரியப்பன், 40, ஆகியோர் நகையை திருடியது தெரியவந்தது. இவர்களை நேற்று கைது செய்த ஆத்துார் டவுன் போலீசார், ஐந்து பவுனை மீட்டனர்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'குற்றாலத்தை சேர்ந்த மாரியப்பன், சில ஆண்டுகளுக்கு முன், நாமக்கல் பகுதியில் வசித்து வந்தார். சேலம், கிச்சிபாளையத்தை சேர்ந்த செந்தில்நாதனுடன், பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். மாரியப்பன் மீது, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சேலம், கோவை, கரூர், தருமபுரி, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை, கொள்ளை தொடர்பான, 15க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளன,' என்றனர்.

