ADDED : ஜூன் 21, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், சின்னதாராபுரம் அருகே, ஆடுகளை திருடியதாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் புஞ்சை காளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன், 38; இவருக்கு சொந்தமான இடத்தில், கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஓன்றை கடந்த, 18 ல் காணவில்லை. அதேபோல், சின்னதாராபுரம் ஊத்துப்பட்டி பகுதியை சேர்ந்த நல்லமுத்து, 35; என்பவர், விவசாய தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த, ஒரு ஆட்டையும் கடந்த, 18ல் காணவில்லை.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இரண்டு ஆடுகளையும் புஞ்சை காளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வீரமுத்து, 20; கச்சினாம்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் சின்னதாராபுரம் போலீசார் கைது செய்தனர்.

